நீச்சல்காரன் முயற்சிகள்
மொழிக் கணிமை, நிரலாக்கம், அறிவுப்பகிர்வு
நீச்சல்காரன்
கணித்தமிழ் முயற்சிகளின் தொகுப்பு
வாணி - உறுப்பினர் பதிப்பு

vaanieditor.com

தமிழில் எழுத்துப் பிழை, தட்டுப்பிழை, புணர்ச்சிப் பிழை, சந்திப் பிழை, ஆங்கிலச் சொல் போன்றவற்றைத் தவிர்க்க உதவும் திருத்தி. ஏபிஐ வசதி, குரல்உள்ளீடு, நூல் மெய்ப்பு போன்ற எண்ணற்ற வசதிகளைக் கொண்டது..

வாணி - பொதுப் பதிப்பு

vaani.neechalkaran.com

தமிழில் எழுத்துப் பிழை, தட்டுப்பிழை, புணர்ச்சிப் பிழை, சந்திப் பிழை, ஆங்கிலச் சொல் போன்றவற்றைத் தவிர்க்க உதவும் திருத்தி. இணையம் வழியாக, கைப்பேசி, கணினியில் பயன்படுத்தக் கூடியாது. இதன் கைப்பேசி செயலி இங்கே உள்ளது.

ஓவன் - ஒருங்குறி மாற்றி

apps.neechalkaran.com/oovan

தமிழில் யுனிக்கோட் மற்றும் யுனிக்கோட் அல்லாத நாற்பதிற்கும் மேற்பட்ட குறியாக்கங்களை ஒழுங்கு மாறாமல் மாற்றித் தரும் செயலி.

தமிழிணைய பிழைதிருத்தி

Tamilinaiyam - Spell Checker.zip

இணையமில்லாமல் மேசைக் கணினியில் செயல்படும் பிழைதிருத்தி. விண்டோஸ் 7 கணினியில் இயங்கத் தக்கது. 2018 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் இதனை வெளியிட்டார்.

கோலசுரபி

apps.neechalkaran.com/kolasurabhi

இணையத்தில் கோலம் வரைய உதவும் செயலி. வளைவு மற்றும் கோடுகள் கொண்டு தான்தோன்றித் தனமான கோலங்களை விரும்பும் புள்ளிகளுக்கேற்ப உருவாக்கிக் கொடுக்கும் இணையச் செயலி.

எண் மாற்றி

vaanieditor.com/number

தமிழ் எண்களைப் பிழை இல்லாமல் எழுதவும், தமிழ் எண் குறியீடுகளாக மாற்றவும் உதவும் செயலி. எண்களை உள்ளீடு செய்து எழுத்துக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

இலக்கண உரையாடி

vaanieditor.com/chatbot

தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளவும் பிழையில்லாமல் எழுதவும் வழிகாட்டும் தமிழ் உரையாடி (chatbot) செயலி. இதன் வழிகாட்டலுடன் மாணவர்கள் பிழையின்றி எழுதலாம்.

கிரந்தம் நீக்கி

vaanieditor.com/grantham

கிரந்தம் கலவாமல் எழுத உதவும் செயலி. கிரந்த மாற்ற விதிகளைக் கற்றுக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் உதவுகிறது

பேச்சி - மொழிபெயர்ப்புக் கருவி

apps.neechalkaran.com/translate

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தரும் எந்திர மொழிபெயர்ப்புக் கருவி(beta version). கூடுதலாக இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை எழுத்துப்பெயர்த்தும் காட்டும்.

சுளகு - எழுத்தாய்வுக் கருவி

apps.neechalkaran.com/sulaku

தமிழ் உள்ளடக்கத்தில் உள்ள எழுத்து, சொல், அடிச்சொல் குறித்த ஆய்வுகள் செய்ய உதவும் இணையச் செயலி. இதில் அகரவரிசைப்படுத்தல், சொல் எண்ணிக்கை காட்டல் போன்ற இதர வசதிகளும் உள்ளன.

மென்கோலம்- பல்குறியீட்டு எழுதி

dev.neechalkaran.com/ascii-tamil

தமிழில் வனப்பெழுத்துக்கள் கொண்டு எழுத உதவும் கருவி. பல எழுத்துருவைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் முறை.

தமிழ் உரையாடி

apps.neechalkaran.com/chatbot

விக்கித்தரவை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் பொது அறிவுக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடி(சாட்பாட்).

பாவாச்சி

apps.neechalkaran.com/rhythm

கவிஞர்கள், பாடலாசிரியர்களுக்கான சொற்கள் மற்றும் மெட்டுக்கான தேட உதவும் இணையச் செயலி. சந்தத் தேடல், சொல் தேடல், பாடல் தேடல்களைக் கொண்டது.

தமிழ் அரிச்சுவடி

apps.neechalkaran.com/alphabets

மழலையர்களுக்கான ஊடாடக் கூடிய தமிழ்க் கற்றல் செயலி. கண்டு, கேட்டு, இயக்கிய கற்றுக் கொள்ள முடியும்.

ஆடு புலி ஆட்டம்

dev.neechalkaran.com/aadu-puli

ஆடு புலி ஆட்டத்தைக் கணினியில் விளையாடும் வசதியை வழங்கும் தளம். மனிதர் மனிதருடனோ கணினி மனிதருடனோ விளையாட முடியும்.

மென்சான்றிதழ் உருவாக்கும் கருவி

apps.neechalkaran.com/ecertificate

சான்றிதழ்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு வார்ப்புருவினை அடிப்படையாகக் கொண்டு சொற்களை மட்டும் மாற்ற வேண்டிய தேவையனைத்திற்கும் இச்செயலி உதவும்.

ஆய்வுப்புள்ளி

tree.neechalkaran.com

தமிழ் சமூகத்தில் விவாதிக்கப்படும் முக்கியத் தலைப்புகளில் விவாதங்களைத் தொகுத்து, ஒரு வழிகாட்டியாகக் காட்டும் ஒரு தொகுப்பு. இதில் சந்தி இலக்கணத்திற்கான ஒரு வழிகாட்டியும் உள்ளது.

விக்கி உருமாற்றி

apps.neechalkaran.com/wikiconverter

விக்கிப்பீடியாவில் ஒரு மொழிகளிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது உள்ளிணைப்புகளை மொழிபெயர்த்துதவும் கருவி. உள்ளிணைப்புகளை மட்டும் மாற்றவோ மொழிபெயர்க்கவோ உதவும் இணையச் செயலி.

நோக்கர்

apps.neechalkaran.com/nokkar

தமிழ் உள்ளாடக்கங்களில் உள்ள எழுத்துப் பிழை, தட்டுப்பிழை, புணர்ச்சிப் பிழை, சந்திப் பிழை முதலியவற்றை அறிக்கையாகக் கொடுக்கும் இணையச் செயலி.

தமிழ்ச்சரம்

tamilcharam.com

ஆரூர் பாஸ்கர் அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தமிழ்ப் பதிவுகளுக்கான வலைப்பதிவுத் திரட்டி. தமிழில் உள்ள வலைப்பதிவுகளின் பதிவுகளைத் தானாகத் திரட்டி, செயற்கை நுண்ணறிவு கொண்டு தொகுத்துத் தரும் தளம்.

திரள்

thiral.in/

செல்வமுரளி அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தமிழ்ச் செய்திகளுக்கான திரட்டி. செய்தி ஊடகங்களிலிருந்து தமிழ்ச் செய்திகளைத் திரட்டி, செயற்கை நுண்ணறிவு கொண்டு தொகுத்துத் தரும் தளம்.

வாணி தொகுப்பகராதி

vaani.neechalkaran.com/word

இதுவொரு சொற்பகுப்புத் திறன் கொண்ட தொகுப்பகராதி. உதாரணம்:"அம்மாவிடம்", "அம்மாவினால்" என்று கொடுத்தாலும் வேர் சொல்லினைப் புரிந்து அம்மா என்ற சொல்லுக்கு விளக்கத்தை பல அகராதிகளிடமிருந்து காட்டும்.

நாவி - சந்திப்பிழை திருத்தி

dev.neechalkaran.com/naavi

தமிழில் சந்திப் பிழைகளைச் சுட்டிக்காட்டி இலக்கணத்தையும் காட்டும். சந்தி இலக்கணம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் இணையச் செயலி.

கிட்ஹப் புள்ளி

http://oss.neechalkaran.com

தமிழில் உள்ள மென்பொருட்கள், செயலிகள், எழுத்துருக்கள், இணையத்தளம் மற்றும் கலைச்சொற்கள் என ஒரே இடத்தில் கட்டற்ற முறையில் தொகுக்கும் முயற்சி.

மேலும் சில கருவிகள்

மேலும் சில கருவிகளை கீழுள்ள முகவரிகளில் காணலாம். http://dev.neechalkaran.com http://apps.neechalkaran.com en.wikipedia.org/wiki/User:NeechalBOT twitter.com/RT_tamil (Depreciated) நிகழ்த்திய கருத்துரைகள் http://www.neechalkaran.com/p/blog-page.html